Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அழகுக்கு அழகு சேர்க்கும்… பழச்சாறு… முகம் பல பலன்னு மின்னும் பாருங்க…!!!

இயற்கை மூலம் முகத்தை பலப்பலப்பாக்க சிறந்த வழி உள்ளது. பழச்சாறுகளின் பயனை பற்றி தெரிந்து கொள்வோம்.  

பழங்களை எல்லோருடைய முகத்துக்கும் பயன்படுத்தி விட முடியாது. குறிப்பாக முகப்பரு இருப்பவர்கள், பேஸ்பேக்குக்கு பயன்படுத்துவதில், அதிக கவனம் செலுத்த வேண்டும். சில வகை பழங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதுண்டு.

முகம் டிப்ஸ் :

திராட்சை பழத்தை மிக்சியில் போட்டு அடித்து அந்த சாறை சருமத்திற்கு தேய்த்து மஜாஜ் செய்தால் சருமம் பளபளப்பாகும்.

சந்தனம், கிளிசரின், மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் போன்றவைகள் சேர்த்த                                          பேஸ்பேக் முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகளைப் போக்கி முகத்தை                                                          மினுமினுப்பாக்கும்.

சந்தனம், பாதாம் எண்ணெய், தேய்காய்ப்பால் சேர்த்த சிரப்பை பயன்படுத்தினால் போதும்.                    கருப்பு திட்டுகள் நீங்கிய பின்பு பப்பாளி சாறும், முந்திரிப்பழச்சாறும் சேர்ந்து மசாஜ் செய்ய                    வேண்டும். சரும அழகு அதிகரிக்கும்.

சோயா மில்க், திராட்சை சாறு, தக்காளி சாறு ஆகியவற்றை பேக் செய்து                                பயன்படுத்தினால், சருமத்தில் இருக்கும் சுருக்கம் நீங்கி இளமைப்பொலிவு கிடைக்கும. ஓட்மிலும், சோயாவும் சேர்ந்து ஸ்கிரப் செய்தால் முக சருமம் நிறமாகும்.

Categories

Tech |