இன்ஜினியரிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாங்காலை பழங்குடியின பகுதியில் மணி-உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஷைனி, மோனிஷா(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் மோனிஷா நாகர்கோவிலில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். தற்போது இறுதியாண்டு தேர்வு எழுதிய மோனிஷா தனது தோழிகளுடன் சென்னையில் அழகு கலை படிக்க விரும்பினார். ஆனால் மோனிஷாவின் பெற்றோர் சென்னையில் சென்று படிப்பதற்கான பொருளாதார வசதி இல்லை. எனவே மேற்கொண்டு எதுவும் படிக்க சொல்ல வேண்டாம் என கூறியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மோனிஷா நேற்று முன்தினம் தனது அறையில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சுத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மோனிஷாவை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோனிஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.