விஷ காயை சாப்பிட்ட 6 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் தளிக்கோட்டூர் கிராமத்தில் படித்து வரும் மாணவர்கள் 10 வயதுடைய நிதிஷ்குமார், 9 வயதுடைய அஜீத், 9 வயதுடைய சதீஷ், 9 வயதுடைய மகேஷ்குமார், 10 வயதுடைய பிக் பாஷா. இந்த மாணவர்கள் நேற்று அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு உள்ள ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த காய்களை அழகு கூடும் என்று கருதி எடுத்துச் சாப்பிட்டார்கள்.
அதன்பின் சிறிது நேரத்தில் அந்த மாணவர்கள் 6 பேரும் திடிரென்று வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார்கள். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து வேப்பனப்பள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.