ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட பொருட்களை மற்றொரு நாட்டில் வாங்கி அந்த நாட்டிற்கு கொண்டு வருவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் சிலர் தடை செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகளை ஏமாற்றி கடத்துவார்கள். இந்நிலையில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் அந்த நாட்டில் தடை செய்யப்பட்ட அழகு சாதன பொருட்களை மற்றொரு நாட்டில் வாங்கி உகாண்டாவிற்கு எடுத்து சென்றுள்ளார். இவர் விமான நிலையத்தில் சோதனை செய்யும் அதிகாரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அழகு சாதன பொருட்களை ஒரு குழந்தையின் உடையில் வைத்துள்ளார்.
அதன்பின் ஒரு குழந்தையை தூக்கி செல்வது போல் அந்தப் பெண்மணி அழகு சாதன பொருட்கள் இருக்கும் உடையை தூக்கி சென்றுள்ளார். ஆனால் அதிகாரிகள் சோதனை செய்தபோது அழகு சாதன பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை கடத்துபவர்கள் மத்தியில் ஒரு பெண் அழகு சாதன பொருட்களை கடத்தியது என்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது