Categories
மாநில செய்திகள்

அழகு நிலையங்கள், முடி திருத்த கடைகள் செயல்பட தடை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்கு போது தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள் மற்றும் முடி திருத்தும் நிலையம் இயங்க தடை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. முக்கிய வணிக காரணம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக கூறியுள்ளது.

Categories

Tech |