அழகு என்றால் அந்த சொல்லுக்கு முருகன் என்று பெயர். மனதின் அனைவரும் முருகனை நினைத்து வேண்டுவர். முருகனை ராஜ வடிவில் காண கோடி கண்கள் வேண்டும்.
முருகனின் 16 திருக்கோலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
சக்திதரன்: ஒரு முகம், இரு கரங்கள், சக்திப்படையுடன் காட்சியளிப்பவர்.
ஸ்கந்தன்: இடையில் கௌபீனம் மட்டும் தரித்து தண்டம் பற்றிய பழனி ஆண்டியின் திருக்கோலம்.
கஜவாகனன்: யானை மீதமர்ந்து நான்கு கரங்களுடன் கொண்ட கோலம்.
சரவணபவனன்: பன்னிரு கரங்கள், ஒரு முகம், ஆறு குழந்தையாகத் தோன்றி அம்பிகையால் ஒரு முகமாக மாற்றப்பட்ட திருக்கோலம்.
தேவசேனாபதி: ஆறுமுகம் – பன்னிருகரங்கள் கொண்டு இந்திரனின் மகளான தெய்வானையை மணந்த கோலம்.
சுப்பிரமணியன்: ஒரு முகம், நான்கு கரங்கள், ஆயுதம் பற்றிய கீழ்க்கரங்களால் அபயம், வரம் அளித்து அருளும் கோலம் கொண்டவன்.
கார்த்திகேயன்: ஆறுமுகங்களும் ஆறு கரங்களும் உடையவன். அபய-வரமளிக்கும் கரங்கள். பிற கரங்களில் ஆயுதங்கள் கொண்ட கோலம்.
குமரன்: நான்கு கரங்களுடன் தேவியான தெய்வானை வலப்புறத்தில் அமைய நின்ற திருக்கோலத்தில் அருள்பவன்.
ஷண்முகன்: ஆறுமுகங்களோடு பன்னிரு கரங்கள் ஆயுதங்கள் ஏந்திய நிலை. மயில் மீது முருகன் அமர்ந்திருக்க அருகில் தேவியர் நின்ற கோலம்.
தாரகாரி: சூரபத்மனின் தம்பியான தாரகாசுரனை அழிக்கப் பூண்ட கோலம். ஆறுமுகம் பன்னிரு கரங்களில் ஆயுதங்கள் ஏந்திய போர்த் திருக்கோலம்.
வள்ளிமணாளன்: தமிழரின் களவு ஒழுக்கத்தின் மூலம் காதல்கொண்டு திருமணம் புரிந்த கோலம்.
பாலமுருகன்: சிறிய பாலக வடிவம், ஒரு கரத்தில் தாமரை மலர்கள், மற்றொரு கரத்தை இடைமீது இருத்திய அழகிய தோற்றம்.
சேனாளி: ஆறுமுகம் பன்னிரு கரங்கள், கீழிரு கரங்கள் அபய வரத முத்திரை, ஏனைய கரங்களில் ஆயுதங்கள்.
கிரௌஞ்சபேதன்: தாரகன், சூரனின் தம்பி இவன் கிரௌஞ்சமலை என்ற மலையின் வடிவில் தனது அண்ணனின் கோட்டையைக் காத்து நின்றான். சக்திவேலின் மூலம் அவனை அழித்து நின்ற திருக்கோலம். ஆறுமுகம், ஆயுதம் தாங்கிய பன்னிருத் திருக்கோலங்கள்.
சிகிவாகனன்: சூரனின் சம்ஹாரத்திற்குப் பின் மயிலான அசுரனின் மீது அமர்ந்த கோலம்.
பிரம்ம சாஸ்தா – பிரணவத்தின் பொருளறியா பிரம்மனை சிறையிலடைத்து, தானே அவரது படைப்புத் தொழிலை ஏற்றதால், பிரம்மனது பொருட்களான அட்சமாலை மற்றும் கெண்டியை ஏந்திய திருக்கோலம்.