சவுதி அரேபியாவை சேர்ந்த ஒருவர் 53 பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இது தொடர்பாக அவர்கள் பேசிய வீடியோவை சேர்ந்தவர்.
அபு அப்துல்லா இவருக்கு 63 வயது 53 மனைவிகள். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: “முதலில் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தோம். திடீரென எங்களுக்குள் மனஸ்தாபம் வந்தது. மன வருத்தம் வந்தது. இதனால் நான் இரண்டாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். முதல் மனைவியால் ஏற்பட்ட மன வருத்தத்திற்கு இரண்டாவது மனைவி மருந்தாக இருந்தார்.
அதன் பிறகு இரண்டாவது மனைவியிடம் பிரச்சனை அதனால் மூன்றாவது மனைவியை திருமணம் செய்து கொண்டேன். இப்படி ஒவ்வொரு முறையும் விவாகரத்து செய்து தற்போது 53 திருமணம் வரை செய்து கொண்டேன். ஆனால் ஒன்று மற்றும் உறுதி உடல் சுகத்திற்காக மட்டும் நான் இத்தனை திருமணங்களை செய்து கொள்ளவில்லை. மனரீதியாக நிம்மதி வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொண்டேன். தான் மணம் முடித்த அத்தனைப் பெண்களும் பேரழகு” என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் அப்துல்லா திருமணம் செய்து கொண்ட அனைத்து மனைவியிடம் தகராறு வந்துள்ளது. ஆனால் எந்த ஒரு மனைவியுடன் அமர்ந்து பேசி அந்த பிரச்சனைக்கு தீர்வு காண அப்துல்லா விரும்பவில்லை. சண்டை என்று வந்ததும் எஸ்கேப் ஆகி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 20 வயது முதல் திருமணம் செய்து கொள்ள ஆரம்பித்த இவருக்கு தற்போது 63 வயதாகின்றது. மொத்தம் 53 மனைவிகள் அனைத்து திருமணங்களையும் பாரம்பரிய முறை செய்துள்ளார். இதில் இன்னொரு சம்பவம் என்னவென்றால் ஒரு நாள் வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு செல்ல அங்கே வெளிநாட்டு பெண்ணை பார்த்து பிடித்து போய் அவரையும் திருமணம் செய்து அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது இனிமேல் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று முடிவு எடுத்துள்ளாராம். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.