தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் தாயாக திமுக அரசு செயல்படுகிறது. முதலில் அரசை தேடி மக்கள் வந்தன.ர் தற்போது மக்களை தேடி அரசு செல்கிறது. தமிழக அரசில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு காது கேட்கும் கருவிகள் தரப்பட்டன என்று பேசியுள்ளார்.