Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அழிந்து வரும் பச்சைக் கிளிகள் பாதுகாக்கும் கிராம மக்கள் ….!!

தர்மபுரி அருகே அழிவின் விளிம்பில் நிற்கும் பச்சைக் கிளிகளை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருவது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பண்ணந்தூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டுப்போன பனைமர பொந்துகளில் ஏராளமான பச்சைக்கிளிகள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பச்சை கிளிகள் எங்கும் செல்லாமல் இருக்க இப்பகுதி மக்கள் பனை மரங்களை வெட்டாமல் அப்படியே விட்டுள்ளனர். இங்கு வாழும் கிளிகள் வெடி சத்தம் கேட்டால் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து விடும் என்பதால் பண்டிகை நாட்களில் கூட மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை பனை மரங்களில் வாழும் பச்சை கிளிகளை உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மக்களும் வேடிக்கை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Categories

Tech |