கரும்பு தோட்டத்திலிருந்து அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆழியூரில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் வளவனூர் தொட்டி பகுதியில் வசித்த சக்திவேல் என்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சக்திவேல் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இவரது சடலத்திற்கு அருகே மது பாட்டிலும், விஷமும் கிடந்துள்ளது. எனவே சக்திவேல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மதுவில் விஷம் கலந்து கொடுத்து யாரேனும் அவரை கொலை செய்தனரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.