Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெற்றிலை மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்திற்கு அருகே இருக்கும் தனியார் கிணற்றில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த வாலிபர் இறந்து மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? வாலிபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |