அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மீட்கப்பட்ட ஆணின் விவரம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் தேவையூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு 45 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை பார்த்து ராமலிங்கம் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து சடலத்தை வீசி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.