அழுகிய நிலையில் பெண்ணின் பிணம் கிணற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ரோஜா நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். மளிகை கடை நடத்தி வரும் இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த கிணற்றில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் பிணமாக மிதந்துள்ளது. இதனை பார்த்த சீனிவாசன் உடனடியாக காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து நாமக்கல் துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்து கிணற்றில் உயிரிழந்த பெண் யார் என்றும் எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி உயிரிழந்தார் என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பெண்ணின் பாதி உடல் சாக்கு மூட்டையில் கட்டியபடி இருந்ததால் பெண்ணை கொலை செய்துவிட்டு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.