10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் இருக்கும் மாருதி நகரில் உள்ள முட்புதரில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டி வந்துள்ளனர். இந்நிலையில் முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அங்கு கிடந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி கார்த்திகா என்பது தெரியவந்துள்ளது. இந்த சிறுமியை காணவில்லை என கடந்த 11-ஆம் தேதி அவரது தாய் கலைவாணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.