அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கண்டித்தான் குளம் பகுதியில் இருக்கும் வெள்ள நீர் கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் உடலில் துணியால் கல் கட்டப்பட்ட நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.