Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளை… நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்…!!!

குழந்தைகள் அடிக்கடி அழுது அடம்பிடிக்கும் என்பதால் அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

பொதுவாக வளரும் குழந்தைகள் என்றாலே, அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கின்றனர். சில குழந்தைகள்  குறும்புத்தனத்துடன் நடந்தாலும்,வளர்ச்சி,  வயது அதிகரிக்கும் போது தங்கள் சுபாவத்தை மாற்றிக்கொள்ளுகின்றன. ஒருசில குழந்தைகள்  பெற்றோருடன் பேசும் வார்த்தைகளும், செலவிடும் நேரமும் குறைய தொடங்கும். அப்படிப்பட்ட சூழலை பெற்றோர்கள்  கையாளுவது சவால் நிறைந்த விஷயங்களாகவே  இருப்பதால் அதிக பொறுமையுடனும், அக்கறையுடனும் செயல்பட்டால், எளிதில் குழந்தைகளை நல்வழிகளில்  கையாளும்  வழிமுறைகள் சில பார்ப்போம்:

குழந்தைகள் கோபமாகவோ, தங்களுக்கு பிடித்தமானவைகளை  கேட்டு அடம் பிடித்து அழுது கொண்டிருந்தாலோ,  அவர்களின் மனதில் பெற்றோர் தங்களது   உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை என்ற ஏக்கம் அவர்களிடத்தில் அதிகம் வெளிப்படும். அதே சமயத்தில் பெற்றோர் எப்படியும் தங்களை அரவணைத்துக் கொள்வார்கள்  என்ற ஏக்கமும் அதிகமும் அதிகம் இருக்கும். எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தை அழுது கொண்டிருக்கும் போது,  அழுகை குறைய தொடங்கிய சமயத்தில் அவர்களை அழைத்து அன்பாக பேசும் நேரத்தில் அவர்களின் விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றிவிட கூடாது.  எனவே அந்த  பழக்கத்தை அப்படியே  பின்பற்ற தொடங்கி விடுவார்கள். அதனால் அவர்களின் கவனத்தை எளிதில்  திசை திருப்ப முயற்சி செய்தால் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப முடியும்.

தொடர்ந்து அடம்பிடித்தால் அவர்களின்  விருப்பதை நிறைவு செய்வதாக  ஒப்புக்கொள்ளுவாதல், அவர்கள்  இயல்பான நிலைக்கு வந்தபின் தெளிவான விளக்கத்தை  சொல்லி புரியவைத்தல். குழந்தையின்  கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது, அவசியம். அவர்கள் சொல்ல விரும்புவதை, பெற்றோர்கள் பொறுமையாக கேளுங்கள்.

சில குழந்தைகள் கோபமாக இருந்தால் அதிகம் சத்தம் போட்டு பேசுதல், கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தரையில் போட்டு உடைப்பதால், குழந்தைகளை அடிக்காமல், அந்த சமயத்தில் பொறுமை காப்பது மிக நல்லது.  குழந்தைகள் அடிக்கடி கோபம் கொள்ளும் போது அதிகரிக்கதொடங்கினால் உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம்.

குழந்தைகள் ஏதாவதொரு கட்டத்தில் பொய் சொன்னால் அவர்களிடம் மனம் திறந்து பேசி எதற்காக பொய் சொல்லுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்து,  எது தவறு? எது சரி? என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.  குழந்தைகள் தவறு செய்தால் கூட திட்டாமலோ, அடிக்காமலோ அன்பாக பேசினால் உண்மையை சொல்வதற்கு பயப்படமாட்டார்கள்.

குழந்தைகள் உடன் பிறந்த சகோதரர், சகோதரிகளுடன் சண்டை போடும் போது அவர்களை அமைதிப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். மீறி சண்டை போட்டால் அபராதம் செலுத்தவேண்டும் என்று கண்டிப்புடன் கூறவேண்டும். எதிர்காலத்தில் அவர்களுக்குள் வெறுப்புணர்வு வளராமல் இருக்க வழிசெய்ய வேண்டும்.

குழந்தைகள்அதிக அளவு நொறுக்குத்தீனிகள், இனிப்பு பலகாரங்களை சாப்பிடுவார்கள். ஆனால் காய்கறி, பழங்களை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். அதற்காக குழந்தைகளை கட்டாயப்படுத்தி சாப்பிடவைக்கக்கூடாது. சத்தான உணவை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கமாக கூறி புரியவைக்க வேண்டும்.

செல்போன், டேப்லெட், வீடியோ கேம் போன்ற டிஜிட்டல் அதிகம் பார்க்கும் குழந்தைகளின் பொழுதுபோக்கில் முக்கிய பங்குவகிக்கின்றன  .குழந்தைகளை சாப்பிடவைப்பதற்கு டிஜிட்டல் சாதனங்களை சார்ந்திருக்கும் நிலையும் அதிகமாகவே  இருக்கிறது. இதை நாள்தோறும் வழக்கமாக  தொடந்தால்  குழந்தைகள்  மின்னணு சாதனங்களுக்கு அடிமையாகி விடுவார்கள். எனவே அவர்களை வெளிப்புற விளையாட்டுகள், இருந்த இடத்தில் இருந்தே விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதால்,  உற்சாகமாக விளையாடவும் தொடங்கிவிடுவார்கள். தினமும் விளையாடுவதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது அவசியம்.

Categories

Tech |