Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அழுது கொண்டே வந்த 2-ஆம் வகுப்பு மாணவி…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கரம் பகுதியில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு செந்தில்குமார் வீட்டிற்கு வெளியே நின்று விளையாடிக் கொண்டிருந்த 2- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் செந்தில்குமரை போலீசார் கைது செய்தனர் இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Categories

Tech |