27 வருடங்கள் மருத்துவ பல் மருத்துவரை சந்திக்காத நபருக்கு 90 சதவீத தாடை அகற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் 27 வருடங்கள் பல் மருத்துவமனை செல்லாமல் போதிய சிகிச்சை எடுக்காமல் இருந்ததால் தற்போது அவரது தாடைப் பகுதி அகற்றப்பட்டு பேச முடியாத நிலைக்கு சென்றுள்ளார். டேரன் வில்க்சன் என்பவருக்கு அனிமோபிளாஸ்டோமா என்ற கட்டி வாய்க்குள் உருவாக்கியுள்ளது எக்ஸ்ரே மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து டேரன் மனைவி கூறுகையில் “பல வருடங்களாக நான் அவரை பல் மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்காக முயற்சி செய்தேன். ஆனால் அவருக்கிருந்த அச்சத்தினால் வருவதற்கு மறுத்துவிட்டார். இந்நிலையில்தான் 27 வருடங்கள் கழித்து மருத்துவரை சென்று பார்த்த பொழுது எங்களுக்கு பெரும் அதிர்ச்சி கிடைத்தது.
அவருக்கு அனிமோபிளாஸ்டோமா பாதிப்பு இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனைத்தொடர்ந்து அவரது 90 சதவீத கீழ்தாடை அகற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரால் சாப்பிட, பேச முடியாத சூழல் உருவாகியுள்ளது எனது கணவர் காலையில் எழுந்த போது அவரது வாயிலிருந்து ரத்தம் வந்தது ஆனால் சரியாக பல் துலக்காததால் தான் இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக நினைத்தேன். அதன் பின்னரே விபரீதம் புரிந்தது இதுவரை அவருக்கு ஆறு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது கால் நரம்புகளில் இருந்து சிலவற்றை எடுத்து மீண்டும் அவரது தாடையை உருவாக்குவதற்கு மருத்துவர்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என கூறினார்.