இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தொழிலதிபர் நியூயார்க்கில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்திய வம்சாவளியான குடும்பம் ஒன்று சவுதி அரேபியாவில் வாழ்ந்து வரும் நிலையில் அந்த குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசான சாலே தனது சொந்தக் காலில் நின்று 33 வயதிலேயே கோடீஸ்வரர் ஆக்கியுள்ளார். குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட அவர் சமூகவலைதளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் எப்பொழுதும் தனது தங்கைகளுடன் எடுத்த புகைப்படங்களாகவே இருக்கும். சென்ற வருடம் தான் சம்பாதித்த பணத்தில் இருந்து இரண்டு மில்லியன் டாலர்களுக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினார். இந்நிலையில் அண்ணனிடம் இருந்து திடீரென எந்த ஒரு தொலைபேசி அழைப்புகளும் வராததால் தங்கை ஒருவர் தன் அண்ணனைத் தேடி வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஏழாவது தளத்தில் இருந்த வீட்டிற்குள் நுழைந்த பொழுது அண்ணனது உடல் தலை கை கால்கள் வெட்டப்பட்டு முண்டமாக கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ந்துபோன தங்கை அலறியடித்தபடி ஓடியுள்ளார். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்தவர்கள் வெட்டப்பட்டு இருந்த உடல் மின்சார ரம்பத்தால் வெட்டப்பட்டதை கண்டறிந்தனர். உடல்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட வீட்டில் ரத்தக்கரை அதிக அளவில் இல்லை என்றே தெரிய வந்துள்ளது. எனவே கொலை செய்வதை தொழிலாக செய்த ஒருவன் தான் இதனை செய்திருக்க வேண்டும் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
வீட்டின் பின்புற கதவு திறந்திருக்க தங்கை வரும் சத்தம் கேட்டு உடல் பாகங்களை வெட்டி கொண்டிருந்த கொலைகாரன் பின்வாசல் வழியாக தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகின்றது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது சாலேயே தொப்பி, கையுறை அணிந்த ஒருவர் பின்தொடர்ந்து லிஃப்டில் நுழைந்தது பதிவாகியுள்ளது. அதோடு லிஃப்டில் இருந்து இறங்கும் போதும் சாலேயின் வீட்டருகே மர்ம நபர் இறங்கியதால் அவர் குழம்பி நிற்க அங்கேயே தனது தாக்குதலை தொடங்கியிருக்கிறார் அந்த மர்மநபர். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் குற்றவாளியை தீவிரமாக காவல்துறையினர் தேடி வருகின்றனர் இச்சம்பவம் நியூயார்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.