Categories
அரசியல்

அழைப்பு விடுத்த ஸ்டாலின்…. நிராகரித்த ஓபிஎஸ்…..!! காரணம் என்ன தெரியுமா…?

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளிடம் காணொளி வாயிலாக உரையாற்றினார். அதில் மு.க ஸ்டாலின் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு மற்றும் நலனை பாதுகாக்கும் வகையில் சமூகநீதி கூட்டமைப்பில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் சேருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்புக்கு பதில் கடிதம் எழுதியுள்ள ஓ.பன்னீர்செல்வம் சமூகநீதிக் கூட்டமைப்பில் சேர்வது தொடர்பான தன்னுடைய கருத்தை அந்த கடிதத்தில் விவரமாக எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “திமுக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பும் வகையில் திமுக அரசு சமூக நிதி கூட்டமைப்பு போன்ற சில ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதில் அதிமுகவுக்கு எந்த உடன்பாடும் இல்லை. அதோடு நீட்தேர்வு போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டும் அதிமுகவின் உதவியை நாடுங்கள் அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம். இதுபோன்ற அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பில் அதிமுகவால் சேர முடியாது..!” எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |