Categories
அரசியல் மாநில செய்திகள்

அழ வச்சுட்டாங்க…! மன கசப்போடு இருக்காரு… எதிராக வேலை செய்வாங்க… அதிர்ச்சியில் முக.ஸ்டாலின் …!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணியை பொறுத்தவரை  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய ஒரு சிறப்பு என்று சொன்னால், திமுகவை போல ஒரு அடாவடித்தனம் கூட்டணி கட்சிகளிடையே செய்வது கிடையாது. காங்கிரஸ் கட்சியை சார்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.கே.எஸ் அழகிரி அழுது விட்டார். அழ வைத்து விட்டார்கள்.

அந்த அளவுக்கு கண்ணீர் விட்டார். வேறு  வழி இல்லாமல் மன கசப்போடு தான் அங்க இருக்குறாங்க. மனப்பூர்வமாக திமுக கூட்டணியில் இல்லை. இதான் உண்மை, இதனுடைய வெளிப்பாடு நிச்சயமா சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக காங்கிரசை தோற்கடிக்க திமுகவும், திமுகவை தோற்கடிக்க காங்கிரஸ்ஸும் கண்டிப்பா வேலை செய்வாங்க. ஏனென்றால் அழுது புலம்பினார் அவரு.

ஆனால் எங்க கூட்டணியில் அப்படி கிடையாது.யார் யாருக்கு என்ன பலம் ? அந்த பலத்தின் அடிப்படையிலே, அதற்கென்று ஒரு குழு போடப்பட்டு, மிக மிக மரியாதையாக பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்றது.

கூட்டணி பேச்சுவாரத்தை நடைபெற்று இருக்குற சூழ்நிலையில தேமுதிக போயிடுது நாங்கள் என்ன செய்ய முடியும். எங்களை பொறுத்தவரையில் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற பாங்கு தான். திமுகவை போல அடாவடி செய்கின்ற பங்கே கிடையாது. தேமுதிக கூட்டணியில் இருந்து போனது, அவர்களுக்கு பெரிய துரதிஷ்டம், எங்களுக்கு துரதிஷ்டம் கிடையாது என அமைச்சர் கூறியது முக.ஸ்டாலினை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories

Tech |