மக்களிடையே கலி முற்றியதால் அதை விரட்ட ஒரு ஒளியாக வந்துள்ளேன் எனக்கூறி தமிழகத்தில் # ஆதி_ பராசக்தி_ அம்மா உருவெடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான அன்னபூரணி 2021 ஆம் ஆண்டு ஆதிபராசக்தி அம்மா அன்னபூரணியாக அவதாரம் எடுத்துள்ளார். அவர்கள் கணவனை விட்டு பிரிந்து தற்போது வேறு ஒரு பெண்ணின் கணவருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. இவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த பராசக்தி செங்கல்பட்டில் திவ்ய தரிசனம் தருகிறார் என்று செய்திகள் உலா வரும் நிலையில் அதே பெண்மணி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோவும் வைரலாகி வருகிறது.