Categories
தேசிய செய்திகள்

“அவங்களுக்கு கண்டிப்பா மரணதண்டனை வழங்கணும்”… 9 வயது சிறுமி பலாத்காரம்… கெஜ்ரிவால் ஆவேசம்…!!!

டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லி முழுவதும் பெரும் போராட்டமாக வெடித்துள்ளது.

டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக உடல் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதிரியார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது விமர்சனம் எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி போலீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதால் உள்துறை அமைச்சரான அமித்ஷா இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது: “டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் அவமானம். டெல்லியின் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம். குற்றவாளிகளுக்கு நிச்சயம் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்

Categories

Tech |