நஞ்சுபுரம் படத்தில் ஹீரோவாக நடித்த ராகவ் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மற்றும் தொகுப்பாளர் இசையமைப்பாளர் என பன்முகத் திறமைசாலி. இவருடைய மனைவி பிரீத்தா இவர்கள் சின்னத்திரையின் பிரபலமான ஜோடிகள். ப்ரீத்தா சின்னத்திரை நடிகை ஆவார். இந்நிலையில் ப்ரீத்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் தன்னுடைய அம்மா தவறி கீழே விழுந்து விட்டதாகவும் அவருடைய கை கால்கள் செயல் இறந்துவிட்டதாகவும் பேச்சு வரவில்லை எனவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதோடு அவருக்கு ஆபரேஷன் செய்ய உள்ளதாகவும் அவர் விரைந்து குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.