தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் செயலால் ரசிகர்கள் வருத்தமடைந்திருக்கிறார்கள்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் திரையுலகில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். மேலும் இவர் கன்னடம், தெலுங்கு, போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் , தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதேநேரம் ராஷ்மிகாவுக்கு மிகுந்த அழகு இருக்கிறது ஆனால் அவருக்கு நல்ல மனது இல்லை என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளிவந்த ராஷ்மிகா மந்தனாவிடம் சிறுமி ஒருவர் தனக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அப்பொழுது ராஷ்மிகா பாடிகார்ட் சிறுமியை விலக்கி விட்டனர். ஆனாலும் அச்சிறுமி ரஷ்மிகாவிடம் தன் கைகளை நீட்டி பசிக்கிறது சாப்பிட ஏதாவது தாருங்கள் என்று கேட்டுக் கொண்டாள். ஆனால் அச்சிறுமிக்கு எதுவும் கொடுக்காமல் சிரித்தபடியே காரில் உட்கார்ந்து விட்டு சென்று விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனால் ராஷ்மிகாவை பலரும் சாடி வருகின்றனர். மேலும் பலர் கமெண்டில் அந்த குழந்தைக்கு ஏதாவது கொடுத்திருக்கலாம் என்று வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்.