Categories
அரசியல்

“அவங்களையும் கொஞ்சம் பாருங்க”….! இல்லனா போராட்டம் நடத்துவோம்…. சீமான் நெருப்பு பறக்க பேச்சு….!!!!

கள் விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கள் இறக்குவதற்கு உள்ள தடையை நீக்க கோரி சீமான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கி கள் இறக்குவதற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட வேண்டும். இந்தக் கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் 100 இடங்களில் கள் இறக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். அதற்கு நான் முழுமையான ஆதரவை தருகிறேன்.

கள் ஒரு உணவுப் பொருள் தானே தவிர அது போதைப் பொருள் அல்ல..! மேலும் கள்ளை கள்ளச்சாராய தோடு ஒப்பிட்டு கொச்சைப்படுத்துவது மற்றும் கள் இறக்கும் தொழிலாளர்களை கள்ளச்சாராயம் மற்றும் எரிசாராயம் காய்ச்சிகின்றனர் என அவர்கள் மீது வழக்கு தொடுப்பது போன்றவை கண்டனத்திற்குரிய செயல் ஆகும்.! எனவே தமிழக அரசு கள் இறக்குவதற்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட வேண்டும். என கேட்டுக் கொள்கிறேன். ” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |