Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவங்கள கைது பண்ணுங்க..! தி.மு.க.வினர் சாலை மறியலால்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் அ.தி.மு.க.வினர் திடீரென தி.மு.க. முகவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வாக்குச்சாவடி மையம் பழனி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் தி.மு.க. நிர்வாகிகள் காளிமுத்து, சரவணன், ரஞ்சித்குமார், திமுக முகவர்களாக நகர துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 7 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தி.மு.க. முகவர்கள் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் வாக்குச்சாவடி மையம் அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதிமுகவை சேர்ந்த சிலர் மற்றும் அதிமுக நகர பொருளாளர் முருகன் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களுக்கும், திமுக முகவர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி தகறாராக மாறியதில் அ.தி.மு.க.வினர், கிருஷ்ணமூர்த்தி உட்பட 7 பேரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

அதில் படுகாயம் அடைந்தவர்களை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அவர்களை திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இதற்கிடையே நேற்று முன்தினம் திமுகவினர் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே தாக்குதல் நடத்திய அ.தி.மு.க.வினரை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |