அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடக மேடையில் நடிகர்களாக பங்கேற்க விருப்பமில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்நடந்தது . இந்தக் கூட்டத்தில், திமுக சார்பில் பொன்முடி, வில்சன், மதிமுக சார்பில் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல். திருமாவளவன், ரவிக்குமார், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை பங்கேற்றுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், கொங்கு மண்டல தேசிய கட்சி சார்பில் சின்ராஜ், மனித மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தை பாஜக மற்றும் அதிமுக கட்சியினர் புறக்கணித்தனர். இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை, திமுகவைப் போல போலியாக வேஷமணிந்து எங்களுக்கு நடிக்கத் தெரியாது. ஆகவே EWS இடஒதுக்கீடு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக பாஜக புறக்கணிக்கிறது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.