சிவகங்கையில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சேந்திஉடையநாதபுரம் கிராமத்தில் முதியவர் ஒருவர் திடீரென இறந்துவிட்டார். அந்த முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வழிவிடாத காரணத்தினால் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஒரு தரப்பினருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காவல்துறையினர் இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று ஒரு தரப்பை சேர்ந்த சுமார் 150 பேர் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய கோரி வாக்களிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வருவாய்துறை சார்பில் சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் நேற்று மாலை 6 மணிக்கு வாக்களிக்க சென்றனர்.