பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால், தேர்தலில் வாக்களிப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மக்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பவானிசாகர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கும் நேற்று இடைதேர்தலானது நடைபெற்றது. இதில் பவானிசாகர் தொகுதியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பாஜக சார்பில் பிரியங்கா திப்ரிவால் ஆகிய இருவரும் களமிறங்கினர். மம்தா பானர்ஜிக்கு வெற்றியானது எப்பொழுதும் போலவே இத்தொகுதியிலும் உறுதியாக உள்ளது.
இதனையடுத்து பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால் தேர்தல் நடைபெறும் பவானி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒவ்வொன்றிற்கும் சென்று மேற்பார்வையிட்டார். இதன் பின்னர் தொகுதியின் 72வது வாக்குப் பதிவு மையத்தை பார்வையிட்ட பின்னர் இவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மக்களுக்கு ரூ.500 கொடுத்துள்ளனர். இதனை பான்ஸ்ட்ரோனி பகுதியிலுள்ள ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார். எனவே இதுகுறித்து புகரானது தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.