Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவங்க ஜெயிச்சிட்டாங்களா…. வாக்கு எண்ணும் மையத்தில்…. திடீரென மயங்கிய தி.மு.க வேட்பாளர்….!!

அ.தி.மு.க வெற்றி பெற்றதை அறிந்த தி.மு.க வேட்பாளர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கையில் 3-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாலமுருகன் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |