நேற்று முன்தினம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் ரிஷப் பந்த் இந்த போட்டியில் ஓபனாக களமிறங்கியது அதிக கவனம் பெற்றது.
இருப்பினும் இவர் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் 34 பந்துகளில் வெறும் 18 ரன்கள் மட்டுமே அடித்து ரிஷப் பந்த் ஆட்டம் இழந்தார். இந்நிலையில் ரோஹித் சர்மா, ஏன் ரிஷப் பந்த் ஓபனராக களமிறங்கினார் ? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரோஹித் சர்மா, “இந்த போட்டியில் பல சவால்களை சந்தித்தோம்.
சூர்யகுமார், ராகுல் இருவருடைய பார்ட்னர்ஷிப் அபாரமாக இருந்ததால் தான் 237 ரன்களை எடுக்க முடிந்தது. அதேபோல் பவுலர்களும் முழு உழைப்பைக் கொடுத்து பந்து வீசினார்கள். இதனால் தான் வெற்றி பெற முடிந்தது. அதிலும் குறிப்பாக சூர்யகுமார் யாதவ் அணிக்கு என்ன தேவை ? என்பதை உணர்ந்து போட்டியில் சிறப்பாக விளையாடினார்.
அதனை தொடர்ந்து ராகுலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார்” என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “நிர்வாகம் புதுமையான விஷயங்கள் சிலவற்றை செய்யுமாறு கேட்டுக் கொண்டது. அதன்பேரில் தான் ரிஷப் பந்த் ஓபனாக களமிறங்கினார். இது முடிவு அல்ல. அடுத்த போட்டியில் ஷிகர் தவன் நிச்சயம் வந்து விடுவார்” என்று கூறியுள்ளார்.