Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவங்க நடவடிக்கை எடுக்கல…. தற்கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநர்…. சென்னையில் பரபரப்பு….!!

கார் ஓட்டுநர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் கார் டிரைவரான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை போலி ஆவணம் மூலம் உறவினர்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை மீட்டு தருமாறு நாகராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மன உளைச்சலில் இருந்த நாகராஜ் மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் இருக்கும் வாக்கி-டாக்கி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நாகராஜை கீழே இறங்கி வருமாறு வற்புறுத்தியுள்ளனர்.

ஆனாலும் அவர் கீழே இறங்கி வர மறுப்பு தெரிவித்ததால் பொதுமக்கள் உடனடியாக மதுரவாயல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது நிலத்தை அபகரித்த உறவினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்தனர். இதனையடுத்து 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கீழே இறங்கி இருந்த நாகராஜை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |