Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அவங்க பழக்கம் சரியில்ல…. நண்பர்களே செய்த கொடூரம்…. வாலிபருக்கு தீவிர சிகிச்சை….!!

நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் காட்டூரணி பகுதியில் கார்த்திகேயன்(21) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டனம்காத்தான் பகுதியை சேர்ந்த ராம்பிரகாஷ்(25) மற்றும் சூரங்கோட்டையை சேர்ந்த திலீபன் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் அவர்களின் பழக்கவழக்கம் பிடிக்காததால் கடந்த சில நாட்களாக திலீபன் மற்றும் ராம்பிரகாஷிடம் பேசுவதை கார்த்திகேயன் நிறுத்தியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் கார்த்திகேயன் மீது ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவத்தன்று கார்த்திகேயன் ஆடுகளுக்கு இலை தழை பறிப்பதற்காக கட்டூரணி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மது அருந்திவிட்டு அங்கு சென்ற திலீபன் மற்றும் ராம்பிரகாஷ், கார்த்திகேயனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து உடனடியாக தப்பியோடியுள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் கார்த்திகேயனை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதுகுறித்து கேணிக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து திலீபன் மற்றும் ராம்பிரகஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |