ஐ.டி நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பாரதிராஜா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதிராஜா அப்பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்த இளம்பெண் பாரதிராஜாவிடம் சரியாக பேசவில்லை. இதற்கிடையில் ஆன்லைன் மூலம் ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து பாரதிராஜா 50 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் கடனை திரும்ப கேட்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பாரதிராஜாவை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காதலி சரியாக பேசாததாலும், கடன் தொல்லை இருந்ததாலும் மன உளைச்சலில் இருந்த பாரதிராஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.