Categories
மாநில செய்திகள்

அவங்க ரெண்டு பேரும் தான் காரணம்: பிரேமலதா விஜயகாந்த் தாக்கு…!!

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், பேரூராட்சி – நகராட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும்தேதிமுக தனித்துப் போட்டியிடும் என்று அறிக்கையும் கொடுத்தாச்சி. ஆனால் எப்போ தேர்தல் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. டிசம்பர், பிப்பிரவரி என்று கூறினார்கள், இப்போது ஒமிக்ரான், கொரோனா பரவல் இருக்கு லாக்டோன் வரும் என்கிறார்கள். தேர்தல் எப்போது என்று இன்னும் அறிவிக்கவில்லை. அறிவிக்கப்படும் போது எங்கள் கட்சி சார்பில் யாரு போட்டியிடுகிறார்கள் என்பதை அதிகாரபூர்வமாக நாங்கள் அறிவிப்போம்.

வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் கருவிகள் சரியாக செயல்படாததால் மழையில் அளவை துல்லியமாக கணக்கிட முடியவில்லை என்ற அளவில் அரசாங்கம் நடக்குது என்பதை தான் நாம் தெரிஞ்சுக்கணும், வேற என்ன நம்ம சொல்றது. அந்த அளவில் இருக்கு அரசாங்கம். ரேடார் கருவி செயல்படவில்லை அதனால் வானிலை அறிக்கை துல்லியமாக கணிக்க முடிவில்லை என்றால் நம்ம அரசாங்கம் அந்த லட்சணத்தில் இருக்கு.

திருவெற்றியூரில் நான் சென்று பார்த்த போது ரொம்ப மனசு வேதனைப்பட்டேன். மொத்தமே நான்கு அடுக்கு தான். ஏன் அங்க சரிந்து விழுகுது, தரமான கட்டிடங்கள் கிடையாது, இதை சொன்னா 30 வருடம் ஆகிவிட்டது என்று பெருமை சொல்கிறார்கள். ஏன் ரிப்பன் பில்டிங் இன்னும் அப்படியே நிற்கிறது, சென்ட்ரல் ஸ்டேஷன் அப்படி நிற்கிறது, கல்லணை அப்படியே நிக்குது, முல்லைப்பெரியாறு அணை இன்றைக்கும் நம் பெயர் சொல்ற மாதிரி நிற்கிறது.

அப்போ அந்த காலத்தில் கட்டிய அனைத்து கட்டிடங்களும் தரமாக இருக்கும் போது, ஆனால் இந்த ஆட்சியில் இவர்கள் கமிஷனுக்கு, கரெப்சனுக்கும் ஆசைப்பட்டு தரமான கட்டிடங்கள் கட்டாததனுடைய விளைவு தான் திருவொற்றியூரில் நடந்த நிகழ்வு. அது தான் பதில் இந்த ரேடார் கருவி செயல்படவில்லை என்பதற்கும். அதனால் கமிசனுக்கும், கரப்சனுக்கும் அடிபணியாமல் மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுக்க வேண்டும் யாராக இருந்தாலும்….

இப்போ திமுக வந்த உடனே எல்லாரு மேலயும் எதுக்காக வழக்கு போடுறாங்க ? இன்றைக்கு ராஜேந்திரபாலாஜி எதற்கு ஓடி ஒளிகிறார், அவர் மேல ஊழல் குற்றச்சாட்டு, அவங்க கிட்ட காசு வாங்கிட்டாங்க, இவங்க கிட்ட வாங்கிட்டாங்க அப்போ ஏன் எல்லா பக்கமும் ரைடு அனுப்புறாங்க தங்கமணி, வேலுமணி எல்லாருக்கும் அனுப்புறாங்க. இப்போ அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவில் இருக்கிறவங்க எல்லாம் ஊழல் வழக்கு போடுவாங்க, அப்போ இதற்கான பதில் நான் சொல்ல அவசியமே இல்லை, அவங்க இரண்டு கட்சியுமே அதற்கு சாட்சி, அந்த வழக்கு போடுகிறார்களே அதுவே சாட்சி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Categories

Tech |