ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் உடனான போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து இவர் ‘முசாபிர்’ ஆல்பம் பாடலை தயாரித்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் உடனான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடன் ‘வேக் மூட் ஆன்’ என பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து லாரன்ஸ் ஐஸ்வர்யா உடனான சந்திப்பு குறித்து பேசியுள்ளார். அதில் “என் தங்கச்சியை பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். நாங்கள் சந்தித்த காரணம் குறித்து விரைவில் தங்கச்சியை அறிவிப்பார். என்னால் எதுவும் சொல்ல முடியாது. அவங்க கூட வேலை செய்ய போறதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவங்க வாழ்க்கை பற்றி பேச உரிமை இல்லை. ஆனா, அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்கணும், நல்ல வரனும். எனக்கு லைப் கொடுத்தார் தலைவர் அவங்க பொண்ணுங்க எப்பவும் நல்லா இருக்கணும். ஐஸ்வர்யா ரொம்ப மரியாதையான பொண்ணு. என் தங்கச்சியின் வாழ்க்கையில் எப்போதும் ஒரு அண்ணனா இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்