சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில் இந்தியாவில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட ஒன்பதாவது கொரோனா தடுப்பூசி ஆகும். அதேபோல் இதுவரை மொத்தம் 29 நாடுகளில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்திருப்பதாக ஸ்புட்டினிக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.