Categories
சினிமா

“அவசரத்துல போட்டோவ மாத்தி போட்டுட்டீங்களா டைரக்டரே “…. வெச்சு செய்யும் ரசிகர்கள்…..!!!!

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜிவி பிரகாஷ் புகைப்படம் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பொருளாக உள்ளது.

துப்பறிவாளன் 2, வீரமே வாகைசூடும், லத்தி போன்ற பல படங்களில் பிஸியாக உள்ளார் நடிகர் விஷால். இவர் அடுத்ததாக திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இவ்விருவரும் இணையும் இப்படத்தின் முதல் பார்வை சில நாட்களுக்கு முன் வெளியானது.MARK ANTONY என பெயரிடப்பட்ட இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜெ.சூர்யா நடிக்கின்றார். பாட்ஷா படத்தில் வில்லனாக ரகுவரனின் பெயர்தான் மார்க் ஆண்டனி.
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இக்கதாபாத்திரத்தின் பெயரைத்தான் இப்படத்திற்கு வைத்துள்ளனர். இப்படத்தின் FIRSTLOOK வெளியாகி தற்போது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.அதற்கு காரணம் விஷால் நடிக்கும் MARK ANTONY FIRSTLOOK போஸ்டரில் விஷாலுக்கு பதில் ஜி.வி.பிரகாஷ் இருப்பதுதான்.

இதற்கிடையில் சினிமா வட்டாரத்தில் கூறப்படுவது என்னவென்றால் ஆதிக் ஏற்கனவே ஜி.வி.ப்ரகாஷிடம் ஒரு கதைசொல்லி ஓகே செய்ததாகவும் பின்பு ஒருசில காரணங்களால் அப்படத்தில் ஜி.வி .நடிக்கமுடியாமல் போனதாகவும் எனவே ஜி.வி.பிரகாஷ்க்காக தயார் செய்யப்பட்ட FIRSTLOOK போஸ்ட்டரை பெயர் மாற்றி அப்படியே வெளியிட்டனர் என்று சமூக வளையதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.இந்த கிண்டல்களை தவிர்ப்பதற்காக விரைவில் MARK ANTONY படத்தின் புது போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

Categories

Tech |