மத்திய அரசாக உள்ள பாஜக தான் ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலத்தில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் இந்த மாநிலங்கள் அனைத்தும் மத்திய அரசையும் ஆளுநரையும் முழுமூச்சாக எதிர்த்து வருகின்றன. அந்தவகையில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜெகதீஸ் தங்கருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதன் உச்ச கட்டமாக மம்தா பானர்ஜி ஆளுநரின் டுவிட்டர் கணக்கை பிளாக் செய்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த மோதலின் உச்சகட்டமாக ஆளுநர் ஜெகதீஷ் தங்கர் மேற்குவங்காளம் சட்டப்பேரவையை முடக்கி வைத்தார். இந்திய அரசியலமைப்பு சட்டம் 174 இன் படி தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்திய நேற்று முதல் ஆளுநர் மேற்கு வங்காள சட்டப்பேரவையில் முடக்கி வைத்தார். இந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட மோதல் போக்கு அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தான் இவ்வாறு சட்டப்பேரவை முடித்து வைக்கப்பட்டதாக பின்பு ஆளுநர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநரால் மேற்குவங்காள சட்டப்பேரவை முடக்கி வைக்கப்பட்டது விதிமுறை மற்றும் மரபுகளுக்கு எதிரானது என கூறினார்.
அரசியலமைப்பு சட்டத்தை நிலை நிறுத்துவதில் ஆளுநர் துணை நிற்க வேண்டும். அதோடு ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது எனக் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய ஜெகதீஷ் தங்கர் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையான கருத்துகளில் எந்த உண்மையும் இல்லை அரசின் கோரிக்கையை ஏற்று தான் சட்டப்பேரவையில் முடித்து வைக்கப்பட்டது. அவர் தெரிவித்த கருத்துக்கள் புண்படுத்தும்படி உள்ளது என கூறியுள்ளார்.