லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.
ஆந்திரமாநிலத்தில் இருந்து தமிழகத்தின் சேலம் பகுதிக்கு கடந்த வியாழக்கிழமை அன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மேட்சல் மாவட்டம் அருகே ஷமீர்பேட்டை ராஜீவ்காந்தி சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு லாரியை முந்த முயற்சித்துள்ளது. அப்போது எதிரே வந்த லாரி அந்த சரக்கு லாரியின் மீது வேகமாக மோதியுள்ளது. இதனையடுத்து இரண்டு லாரிகளும் வேகமாக மோதியதில் தீப்பற்றி ஏறிய ஆரம்பித்துள்ளது.
இதில் ஒருவர் தப்பிக்க முடியாமல் அந்தத் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.