பைலட் விமானத்திலிருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ராலே டர்ஹாம் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள புல்வெளியில் இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட CASA CN-212 என்ற சிறிய ரக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான நிலைய ஊழியர்கள் விமானத்தில் இருந்த விமானியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் விமானத்தில் வந்த துணை விமானியான சார்லஸ் கெவ் க்ரூக்ஸ் விமானம் தரையிறக்கப்பட்ட போது வானிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பாராசூட் எதுவும் இல்லாமல் கீழே குதித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தேசிய போக்கு வரத்து பாதுகாப்பு ஆணையம் மற்றும் மத்திய போக்குவரத்து விமான ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.