மதிய உணவு வழங்காததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரில் இருந்து மாலத்தீவுக்கு நேற்று காலை 11:45 மணி அளவில் ஒரு வானுர்தி புறப்பட்டது. இந்த வானுர்தி வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி கோவை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பிறகு வானுர்தி அவசர அவசரமாக கோயமுத்தூர் ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்டது.
இந்த வானுர்தியில் சுமார் 92 பயணிகள் இருந்த நிலையில், விமானத்திலிருந்து யாரும் இறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் விமானத்தில் ஏதேனும் கோளாறு இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து மதிய நேரம் ஆகியும் பயணிகளுக்கு உணவு வழங்காததால் பயணிகள் ஆத்திரத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விமானத்திலிருந்து பயணிகள் கீழே இறங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் விமானம் புறப்படும் வரை பயணிகள் ஓய்வறையில் தங்கி ஓய்வெடுத்தனர்.