நேற்று தலைநகர் டெல்லியிலிருந்து துபாய்-க்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட்1 விமானமானது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கராச்சியில் (பாகிஸ்தான்) அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதையடுத்து குஜராத்திலிருந்து மும்பை புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானமானது மும்பையில் அவசரஅவசரமாக தரை இறக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஏனெனில் விமானத்தில் துணை விமானியின் பக்ககண்ணாடியில் விரிசல் இருந்ததால் தரைஇறக்கம் செய்யப்ட்டது என கூறப்படுகிறது.
நேற்று மட்டும் 2 ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அவற்றில் ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் பற்றி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் விமான பயணிகளின் பாதுகாப்பே முதன்மையானது என்று விமான போக்குவரத்து ஆணையரகம் அறிவுறுத்தி உள்ளது.