Categories
உலக செய்திகள்

அவசரமா ஆஸ்பத்திரிக்கு போகணும்…. கெஞ்சிய நபர்…. விசாரித்த போலீஸ்…. காத்திருந்த அதிர்ச்சி…!!!

தன் மனைவியின் பிரசவத்துக்கு அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி மோசடி செய்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் Clay Marvin Hunt என்பவர் தனது காரின் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவர் டிரக் ஓட்டுனரிடம் சென்று தனது காரை டிராக்கில் கட்டி இழுத்து செல்ல வேண்டும் அதற்கு தான் பணம் தருவதாக கூறி இருக்கிறார். இதையடுத்து காரை டிரக்கில் ஏற்றி அவர் செல்ல வேண்டிய இடம் வந்தவுடன் சொன்னது போலவே டிரக் ஓட்டுனருக்கு clay பணம் கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து டிரக் ஓட்டுனர் பார்த்த போதுதான் அவை அனைத்தும் போலியான பணம் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஓட்டுனர் காவல்நிலையத்தில் அளித்த புகார் அளித்துள்ளார். அதையடுத்து காவல்துறையினர் clay விடம் விசாரித்த போது “என் மனைவியை மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளேன். நான் இப்பொழுது அவசரமாக அங்கு செல்ல வேண்டும் என்று கெஞ்சியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று அப்படி யாரேனும் அனுமதிக்கப்பட்டுள்ளார்களா? என்று விசாரித்ததில் இல்லை என்பது உறுதியானது.

இதனையடுத்து காவல்துறையினரின்  தீவிர விசாரணைக்கு பிறகு, அவர் வைத்திருந்த காரை ஒரு வீட்டில் இருந்து திருடி வந்ததாகவும் காருக்குள் நிறைய கள்ள நோட்டுகள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |