மதுரையில் மத்திய சிறை கைதியை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குற்றங்களும் அநீதிகளும் பெருகிக்கொண்டே வருகிறது . இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினர்கள் பலவிதமான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் முடியாதபட்சத்தில் கைது செய்து சிறையிலடைப்பார்கள் .
இந்நிலையில் மதுரை மாவட்டம் மருதுபாண்டியர் நகரில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறை இருந்துள்ளார். இந்நிலையில் பால்பாண்டி அவசர விடுதலை வாங்கி வெளியே வந்ததையடுத்து, விடுதலை காலம் முடிந்தும் மீண்டும் சிறைக்கு செல்லவில்லை. இதனால் மருதுபாண்டியர் நகரின் காவலர்கள் மீண்டும் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை தேடிவருகிறார்கள்.