எதிர்க்கட்சித் தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை பார்த்து அழுவதா? சிரிப்பதா? தெரியவில்லை என்று நீர்வளத் துறை அமைச்சர் முருகன் கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி முதல்வராக இருந்த போதும் எதிர்கட்சித் தலைவராக சட்டப்பேரவையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடு தான் நடந்து கொண்டிருந்தார். அவரது கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக தடுமாறி போயிருக்கிறார். மேலும் நிதானம் தவறு இருக்கிறார் என்பது அவர் வெளியிட்ட 25/9/202248 அறிக்கையின் மூலம் தெரிகின்றது. ஆந்திர அரசு ஆந்திர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாலாற்றின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் கட்டப் போவதாக அந்த மாநில முதல்வர் பொதுக்குழு கூட்டத்தில் பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் அது ஒரு பொதுக்கூட்ட செய்திதான் அந்த செய்தியை வைத்துக்கொண்டு திமுக அரசு என்ன சாதித்துவிட்டது என அவசர குடுக்கியாக எதிர்க்கட்சி தலைவர் ஒரு அறிக்கை விட்டிருப்பதை பார்த்து எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இப்படித்தான் முன்னர் ஒருமுறை இதே கணேசபுரத்தில் அணைகட்ட போவதாக வந்த செய்தியை பார்த்து சில அறிக்கை தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினும் நானும் கணேசபுரம் போய் பார்த்தபோது அப்படி ஒரு அணை கட்டுவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை. மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை இந்த அரசு தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை தக்க சமயத்தில் எடுக்கும் இந்த நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எல்லாம் எடப்பாடியாருக்கு தேர்ந்தெடுக்க நியாயம் இல்லை. அவர் எந்த அணையும் கட்டவில்லை. அந்தரத்தில் நீர்பாய்ச்சும் அரசாங்கம் நடத்தி விட்டு போனவருக்கு நிர்வாக நடைமுறைகள் எப்படி தெரியும் வார்த்தைகளை கொட்டுவது சுலபமானால் அதை திரும்ப அள்ளுவது கஷ்டம் என அவர் கூறியுள்ளார்.