இந்தியாவில் வேலை பார்ப்பவர்களின் மாத சம்பளத்திலிருந்து ஒரு சிறிய தொகை பிஎப் பணமாக பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களை மருத்துவ அவசரநிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறிப்பிட்ட ஒரு பகுதி தொகையை திரும்ப பெற தற்போது அனுமதி வழங்குகிறது. அவ்வகையில் தங்கள் வருங்கால வைப்பு நிதி முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவமனை ஆவணங்கள் இன்றி பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் அவசர காலத்தில் உதவிக்காக pf பணத்தை பெறும் முறைகள் குறித்து இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
EPFo போர்டல் epfindia.gov.in என்ற இணையதள பக்கத்தில் நுழைந்து கேப்சா விவரங்களை சரி பார்க்கும் முன் உங்கள் கணக்கு எண் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி லாகின் செய்து, அதில் ஆன்லைன் சர்வீஸ் பகுதியில் claim என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அடுத்த பக்கத்தில் கேட்கப்படும் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவிட்டு, பின்னர் வங்கி கணக்கு எண்ணை பதிவிட வேண்டும். அது சரி பார்க்கப்பட்ட பின்னர் “proceed for online claim” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில், pf advance என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் பணம் எடுப்பதற்கான காரணத்தில் outbreak of pandemic என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.அதில் எவ்வளவு தொகை வேண்டும் என்பதை பதிவிட்டு காசோலை நகலை அப்லோடு செய்து முகவரியை பதிவிட வேண்டும். அதன் பிறகு மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி பதிவிட வேண்டும்.இதன்பிறகு திரும்ப பெறுவதற்கான விண்ணப்பம் ஒரு வேலை நாளில் சமர்ப்பிக்கப்பட்டால் அடுத்த நாளின் இறுதிக்குள் பணம் செலுத்தப்படும்.நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரியாக இருந்தால் வங்கி கணக்குக்கு பணம் வந்து சேரும்.