Categories
உலகசெய்திகள்

“அவசர நிலை பிரகடனம்” வாபஸ்…. இலங்கை அதிபர் அதிரடி அறிவிப்பு….!!

இலங்கையில் ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவு முதலிலிருந்து அவசரநிலைச் சட்டம் வாபஸ் செய்யப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.

இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது. இதனால் பொது மக்கள் வீதியிலிறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியை முன்வைத்து அந்நாட்டு மந்திரிகள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள்.

இந்நிலையில் இலங்கை அதிபரான கோத்தபய ராஜபக்சே அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவிலிருந்து அவசர நிலை பிரகடனம் வாபஸ் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |