Categories
அரசியல் மாநில செய்திகள்

அவதாரம் எடுக்கணுமா ? நான் ஒருத்தனே போதும்…. ரொம்ப பயப்படுறீங்க …!!

சசிகலாவுக்கு தமிழக முதல்வர் பயந்து இருப்பதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திமுக சார்பில் நேற்று சென்னையில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய முக.ஸ்டாலின்,  ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை விடுத்த முடியாதுன்னு முதல்வர் பேசியிருக்கிறார். அதிமுகவை வீழ்த்துவதற்கு இந்த ஸ்டாலின் எந்த அவதாரத்தை எடுக்க தேவையில்லை. ஸ்டாலின், ஸ்டாலின் ஆகவே இருந்தாலே அதிமுக அழிஞ்சிடும்.

அதிமுகவை கரையானை போல பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் அரிச்சுக்கிட்டு இருக்காங்க,  அது பலவீனமாயிடுச்சு. எனவே இதனை வீழ்த்துவதற்கு இன்னொரு அவதாரம் தேவையில்லை. காலை பிடிச்சவங்க சிறையை விட்டு வெளியே வந்த உடனே பயந்து போய் அதிமுக தலைமைக் கழகத்தை பூட்டினவர்  முதல்வர். அவங்க அம்மா ஜெயலலிதாவின் சமாதியை பூட்டினது யாரு ? முதல்வர் பழனிசாமி.

ஜெயலலிதா பிறந்தநாள் கூட அதை திறக்க முடியல. அதற்கு காரணம் முதல்வர் பழனிச்சாமி. அந்த அளவுக்கு பயந்து கிடக்குற முதல்வர் பழனிச்சாமி, விரைவில் விழுந்துட போகிறார்கள், மக்கள் அதை செய்வாங்க.அதோடு ஸ்டாலின் ஆட்சியிலே இல்லை, அவர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என முதல்வர் பழனிச்சாமி சொல்லியிருக்கிறார். அப்படியானால் நான் சொல்லுறது அனைத்தையும் எதுக்காக பழனிச்சாமி அறிவிச்சிட்டு இருக்காரு என முக.ஸ்டாலின் விமர்சித்தார்.

Categories

Tech |